தெலுங்கானாவில் சோகம் - கல்லூரியில் நடனமாடிய மாணவி மயங்கி விழுந்து பலி.!
college student died in telungana
தெலுங்கானாவில் சோகம் - கல்லூரியில் நடனமாடிய மாணவி மயங்கி விழுந்து பலி.!
தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள நியலகொண்டபள்ளி அரசு ஆதர்ஷ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதீப்தி சிங் என்ற மாணவி சக மாணவர்களுடன் நடனமாடியுள்ளார்.
அப்போது அவர் திடீரென மயங்கி மேடையிலேயே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த மருத்துவ கல்லூரி ஆசிரியர்கள் ஓடிவந்து மாணவி பிரதீப்திக்கு முதலுதவி அளித்தனர். இருப்பினும் மாணவி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

உடனே ஆசிரியர்கள் அந்த மாணவியை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாணவிக்கு ஏற்கனவே இதயத்தில் ஓட்டை இருந்ததும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய பெற்றோரிடம் அறிவுறுத்தி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், பெற்றோர்கள் மருத்துவ செலவிற்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் மாணவிக்கான அறுவை சிகிச்சையை தள்ளிப் போட்டுள்ளார். இந்த நிலையில் தான் மாணவி உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
English Summary
college student died in telungana