காக்க வேண்டிய தந்தை, தாத்தா, மாமாவால் சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


தனது சொந்த தந்தை, தாத்தா, மாமா ஆகியோரால் ஆறு ஆண்டுகளாக ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் விஷாகா கமிட்டியின் போது தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து தெரிவித்துள்ளார். 

கடந்த ஆறு வருடங்களாக அந்த பெண் தனது சொந்த தாத்தா, தந்தை, மாமா உள்ளிட்டோரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தை கல்லூரி நிர்வாகம் அறிந்தவுடன் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தது. 

இந்த தகவலின் பெயரில் போலீசார் 49 வயது கொண்ட சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர். மாமா மற்றும் தாத்தா மீது உள்ள புகார் குறிப்பு விசாரணை நடந்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர். 

அரணாக இருக்க வேண்டிய தந்தையின் தாத்தா, மாமா ஆகியோரும் சேர்ந்து சிறுமியை ஆறு வருடங்களாக தங்களது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college girl raped for 6 years by own family


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal