ராகுல் காந்தி யாத்திரையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்பு.!!
cm mk stalin joined ragulgandhi rally in bihar
பீகார் மாநிலத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்குகள் திருட முயற்சி நடப்பதாக நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி தலைமையில், வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில் யாத்திரை நடைபெறுகிறது. கடந்த 17-ந்தேதி சசாரம் நகரில் தொடங்கிய இந்த யாத்திரை பாட்னாவில் வருகிற 1-ந்தேதி நிறைவடைகிறது. மொத்தம் 16 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். திறந்தவெளி வாகனத்தில் ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணி செல்கிறார். இதேபோன்று கனிமொழி எம்.பி. பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ராகுல் காந்தி பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பேரணி நிறைவடையும் இடத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பின்னர் அவர், அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2 மணியளவில் தர்பங்கா விமான நிலையத்திற்கு வந்து சிறப்பு விமானம் மூலம் மாலை 4.30 மணியளவில் சென்னை திரும்புகிறார்.
English Summary
cm mk stalin joined ragulgandhi rally in bihar