பெஞ்சல் புயல் - புதுவையில் சினிமா காட்சிகள் ரத்து.!
cinema screening cancelled in puthuchery for storm
புயல் காரணமாக சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நேற்று மலை உருவான ஃபெஞ்சல் புயலால், நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு 90 கி.மீ- மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ- புதுச்சேரியில் இந்து 80 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ள இந்தப் புயல் மாமல்லபுரம் - மரக்காணம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே, புயல் எதிரொலியால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
cinema screening cancelled in puthuchery for storm