''மத்திய கிழக்கு மோதலில் பிரிக்ஸ் கூட்டமைப்பு அமைதியை உருவாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்''; சீன அதிபர் ஜி ஜின்பிங்..! - Seithipunal
Seithipunal


18 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கி நடைபெறுகிறது. இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது;

மத்திய கிழக்கில் நிலவும் மோதல், சர்வதேச சமூகத்தின் பொது நலன்களுக்கு உகந்தது அல்ல என்று குறிப்பிட்டதோடு, மத்திய கிழக்கு மோதலில் பிரிக்ஸ் கூட்டமைப்பு அமைதியை உருவாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், அந்தப் பணியில் மற்ற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து சீனா செயல்படும் என்று அறிவித்தார்.

அத்துடன், பிரிக்ஸ் கூட்டமைப்பை 'குளோபல் சவுத்' பிராந்தியத்தில் ஒரு முன்னணி அமைப்பாக உள்ளது என்றும், புதுமை சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டிய வளரும் நாடுகளின் சுயசார்புக்கான ஒரு முன்மாதிரியாக இந்த அமைப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் வரும் 2027-ஆம் ஆண்டில், பிரிக்ஸ் அமைப்பின் சுழற்சி முறைத் தலைமைப் பொறுப்பைச் சீனா ஏற்கவுள்ளது. இது குறித்து சீன ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, உண்மையான பன்முகத்தன்மை மூலம் ஒற்றுமைக்கான அடித்தளத்தை வலுப்படுத்துதல், ஒத்துழைப்பு தளங்கள் மூலம் வளர்ச்சி உத்திகளை ஒருங்கிணைத்தல் மற்றும் உலகளாவிய வளர்ச்சி, பாதுகாப்பு, நாகரிகம் மற்றும் நிர்வாகம் சார்ந்த முன்னெடுப்புகள் மூலம் பொதுவான வளர்ச்சிக்கான உத்வேகத்தை உருவாக்குதல் ஆகியவற்றைச் சீனா தொடர்ந்து மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், டிஜிட்டல் பொருளாதாரம், பசுமை வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு, வறுமை ஒழிப்பு மற்றும் விவசாய மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை எட்டவும் சீனா முயற்சி எடுக்கும் என்று சீன ஊடகங்கள் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது. 

இன்று இந்தியாவின் தலைமையில் தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கியபோது, ​​பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை வரவேற்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chinese President Xi Jinping stated that the BRICS bloc must shoulder the responsibility of fostering peace in the Middle East conflict


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->