தலாய்லாமா வாரிசு நியமனம்: உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என சீனா எச்சரிக்கை..!
China opposes Kiren Rijijus comments on Dalai Lamas successor appointment
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஆன்மிக தலைவர் தலாய் லாமா, அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் வாழ்ந்து வருகிறார். எதிர்வரும் 06-ஆம் தேதி 90-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.
இந்நிலையில், தன் (தலாய் லாமா) மறைவுக்குப் பின்னரும், 500 ஆண்டுகள் பழமையான அறக்கட்டளை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், தன் மறுபிறவி என்று சொல்லப்படும் 15-வது தலாய் லாமாவை தேர்வு செய்யும் அதிகாரம், போட்ராங் அறக்கட்டளைக்கு உள்ளதாகவும் அறிவித்திருந்திருந்தார். ஆனால், தங்களின் அங்கீகாரம் இல்லாமல் தலாய் லாமாவை தேர்வு செய்ய முடியாது என சீனா கூறியுள்ளது.

அத்துடன், தலாய் லாமாவின் வாரிசு நியமனம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்த கருத்துக்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அவர்களின் உள் நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனக்கூறியுள்ளது. சீனாவின் இந்த கருத்து தொடர்பாக கிரண் ரிஜிஜூ விளக்கமளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூதலாய் லாமாவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க தர்மசாலா சென்றுள்ளார். அங்கு அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது: திபெத்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுதும் வாழும் ஆதரவாளர்களுக்கும் தலாய் லாமாவின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. அவரது வாரிசை தீர்மானிக்கும் உரிமை, தலாய்லாமாவுக்கே உள்ளது. இதில் வேறு யாரும் தலையிட முடியாது,' எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் பதிலளித்து கூறியதாவது: இந்தியா தனது வார்த்தைகளிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், திபெத் தொடர்பான விஷயங்கள் உள்ளிட்ட சீனாவின் உள்நாட்டு பிரச்னையில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தியா - சீனா இடையிலான உறவில் ஏற்படும் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்றும், தலாய் லாமாவின் சீன எதிர்ப்பு கொள்கை குறித்து இந்தியா தெளிவுபடுத்துவதுடன், திபெத் தொடர்பான பிரச்னைகளில் தனது உறுதிமொழியை இந்தியா மதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
குறித்த சீனாவின் கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் தான் தலாய்லாமாவின் பக்தன் எனவும், தனது வாரிசை தலாய் லாமாவே தேர்வு செய்வார் என அவரை பின்பற்றும் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இந்திய அரசு சார்பாகவோ அல்லது சீன அரசின் பிரதிநிதியாகவோ நான் எதையும் செய்யவில்லை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தலாய் லாமா தொடர்பாகவும், அவரது அறக்கட்டளை தொடர்பாகவும் வரும் தகவல்களை பார்த்தோம். மதம் மற்றும் நம்பிக்கை தொடர்பான விஷயங்களில் இந்திய அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.
பேசுவதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டில் உள்ள அனைவருக்கும் மத சதந்திரத்தை இந்திய அரசு உறுதி செய்து வருகிறதாகவும், தொடர்ந்து அதையே இந்தியா செய்யும் என்றும் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
English Summary
China opposes Kiren Rijijus comments on Dalai Lamas successor appointment