நாய்களை கொன்று குவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - முதலமைச்சர் பினராயி விஜயன்.! - Seithipunal
Seithipunal


நாய்கள் தொல்லை குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 

"கேரளாவில் நாய்களை கொன்று குவிப்பதால், பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. நாய்களை விஷம் வைத்தும், அடித்தும் கொன்று குவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாய்கள் கூட்டமாக சுற்றி திரிவதும் கூட்டம் கூடுவதும் அவைகளின் குற்றமல்ல. 

தெருவோரங்களில் கண்ட, கண்ட இடங்களில் பொதுமக்கள் வீசி எறியும் மாமிசம் உள்பட கழிவுகளை உண்ணத்தான் அவைகள் கூடுகின்றன. அந்த நேரத்தில் அந்த வழியாக செல்பவர்களை நாய்கள் தொல்லை செய்கிறது. 

கழிவுகளை பொதுவான, பாதுகாப்பான இடத்தில் சேமித்தால் இந்த பிரச்சினை ஏற்படாது. நாய்கடிக்கான மருந்துகள் தரமற்றது என புகார்கள் எழுந்துள்ளது. இதற்கு மத்திய சுகாதார துறைதான் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கேரளா முதல்வர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister binarayi vijayan report


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->