'விளம்பரத்திற்காக தொடுக்கப்படும் வழக்குகள் அனுமதிக்கப்படாது; ஆனால், ஏழை வக்கீல்களுக்காக நள்ளிரவு வரை நீதிமன்றத்தில் இருப்பேன்'; தலைமை நீதிபதி சூர்யகாந்த்..!
Chief Justice Suryakanth says he will be in court until midnight for poor lawyers
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கவாய் கடந்த 23 ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து, நாட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் 24; நவம்பர் அன்று பதவியேற்றார். தலைநகர் டெல்லி தர்பார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள சூர்யகாந்த், முதலில் நீதி வழங்கிய தீர்ப்பே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது மத அணிவகுப்புகளில் பங்கேற்க மறுத்ததற்காக கிறிஸ்தவ இராணுவ அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த வழக்கு முக்கியமானதாகும்.
இந்நிலையில், ஏழை வக்கீல்களுக்கு நீதி வழங்குவதே எனது முதன்மையான முன்னுரிமை என்றும், அவர்களுக்காக நள்ளிரவு வரை என்னால் நீதிமன்றத்தில் அமர முடியும் என்று சூர்யகாந்த் கூறியுள்ளார். மத்திய அரசுக்கு எதிராக திலக்சிங் டாங்கி என்பவர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தள்ளுபடி செய்தார்.இதனைத்தொடர்ந்து அவர் கூறியதாவது;

நீதிமன்றத்தில் விளம்பரத்திற்காக தொடுக்கப்படும் வழக்குகள் எதுவும் அனுமதிக்கப்படாது என்றும், இத்தகைய வழக்குகள் பணக்கார வக்கீல்களால் தாக்கல் செய்யப்படுகின்றன என்று கூறியுள்ளார்.
மேலும், 'உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.கடைசி வரிசையில் இருக்கும் மிக சிறிய, ஏழை வக்கீல்களுக்காக நான் இங்கே இருக்கிறேன். அவசியம் எனில் அவர்களுக்காக நான் நள்ளிரவு வரையும் இங்கேயே அமர்ந்திருப்பேன்.' என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியுள்ளார்.
English Summary
Chief Justice Suryakanth says he will be in court until midnight for poor lawyers