முன்னாள் முதலமைச்சரின் மகன் அதிரடி கைது! மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அதிரடி!
Chhattisgarh Ex CM Son Arrested
சத்தீஸ்கரில் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக, முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2019 முதல் 2022 வரை நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மதுபான விநியோகத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தப் புகாரில், சுமார் ₹2,100 கோடி இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதையடுத்து, மார்ச் 9ஆம் தேதி சைதன்யாவை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது, துர்க் மாவட்டம் பிலாய் நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சைதன்யா கைது செய்யப்பட்டார்.
பின்னர், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஐந்து நாள்கள் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சைதன்யாவின் பிறந்த நாளன்று அவரது கைது நிகழ்ந்துள்ளதால், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. மேலும், அவரது வீட்டை முற்றுகையிட்ட தொண்டர்களால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
English Summary
Chhattisgarh Ex CM Son Arrested