உலகக் கோப்பை செஸ்: சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்! - Seithipunal
Seithipunal


ஜார்ஜியாவின் பதுமி நகரில் நடைபெற்று வரும் 3-வது பிடே பெண்கள் உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் நேருக்கு நேர் மோதினர்.

முதலில் நடைபெற்ற கிளாசிக்கல் ஆட்டம் டிரா ஆனது. இரண்டாவது ஆட்டமும் கிளாசிக்கல் முறையில் நேற்று நடந்தது. இதில் வெள்ளை காய்களுடன் ஆடிய ஹம்பி, 34-வது நகர்த்தலில் திவ்யாவுடன் டிரா செய்தார். இதனால், இரண்டு ஆட்டங்களும் சமனில் முடிந்ததால், இருவருக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் திவ்யா தேஷ்முக் தனது நெருக்கடியான விளையாட்டு திறமையை காட்டி ஹம்பியை தோற்கடித்து வெற்றி பெற்றார். இதன் மூலம், பெண்கள் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனையாக திவ்யா தேஷ்முக் புதிய சாதனை படைத்தார்.

கோனெரு ஹம்பி இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இரண்டு வீராங்கனைகளும் இந்தியா சார்பாக உலக அரங்கில் பிரமிக்கவைக்கும் வகையில் மிகச் சிறப்பாக தங்களை நிரூபித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chess World Cup divya deshmukh champion


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->