நகராட்சி, மாநகராட்சி தேர்தல்? பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியானது.

தமிழகத்தில் கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மட்டும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில், சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று வெளியிட்டார்.அதன்படி, சென்னையில் மொத்தமாக 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சென்னையில் ஆண் வாக்காளர்கள் 19.15 லட்சம், பெண் வாக்காளர்கள் 19.71 லட்சம், மூன்றாம் பாலினத்தவர்கள் 989 பேர் உள்ளனர்.

அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3.03 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக துறைமுகத்தில் 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் இருந்ததைவிட 32,362 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவரி 22ஆம் தேதி வரை திருத்த மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக இந்த வரைவு வாக்காளர் பட்டியல் பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai local body voter list released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->