அடுத்த டார்கெட்டை பிக்ஸ் பண்ண சி.ஐ.டி.! முதல் இடமே இவருக்கு தான் - பரபரப்பில் நாரா லோகேஷ்! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் அமராவதி நகரில் உள் வட்டச் சாலை அமைப்பதில் நடந்த ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி என சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர். 

சி.ஐ.டி. போலீசார் ஏ.சி.பி நீதிமன்றத்தில் லோகேஷ் பெயரை குறிப்பிட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் உள்பட சிலர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இந்த வழக்கு காரணமாக சி.ஐ.டி போலீசார் அடுத்ததாக லோகேஷை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையே டெல்லியில் நாரா லோகேஷை நேற்று ஜனாதிபதி திரௌபதி முர்மு சந்தித்தார். அப்போது தனது தந்தை மீது ஆந்திரா அரசு போய் வழக்கு போட்டுள்ளதாக புகார் அளித்தது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chandrababu Naidu son creates excitement Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->