மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அதிரடி கைது.!
central minister kishan reddy arrested in hydrabad
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அதிரடி கைது.!
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அரசின் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்து இருபத்து நான்கு மணிநேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக கிஷன் ரெட்டி அறிவித்திருந்தார்.
இருப்பினும் கிஷன் ரெட்டியின் உண்ணாவிரதப் போராட்டம் ஹைதராபாத் இந்திரா பார்க்கில் இன்று இரவும் தொடர்ந்தது. ஆனால் போலீசார் இதற்கு அனுமதி தரவில்லை..

இதையடுத்து கிஷன் ரெட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற இடத்தில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இதற்கு எதிராக பாஜக தொண்டர்களும் திரண்டனர். இதன் காரணமாக ஹைதராபாத் இந்திரா பார்க் பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை கைது செய்தனர். இதற்கு, எதிராக தெலுங்கானா பாஜகவினர் போராட்டங்களை நடத்தினர். இதனால், ஹைதராபாத்தில் பதற்றம் ஏற்படுகிறது.
English Summary
central minister kishan reddy arrested in hydrabad