பொதுக்காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி - மத்திய அரசு முடிவு?..! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு, மார்ச் மாதம் முதல் கூடுதல் முதலீடாக 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காப்பீட்டு நிறுவனங்களான நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய மூன்று பொது காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. 

இந்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி வழங்க மத்திய அமைச்சரவை கடந்த வருடம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, இந்த மூன்று நிறுவனங்களுக்கும், இந்த நிதியாண்டில் ரூபாய் 3 ஆயிரம் கோடி வழங்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

வரும் மார்ச் 8 ஆம் தேதி நாடாளுமன்றம் கூறுகையில், துறை மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், அதன் பின்னர் இந்த கூடுதல் முதலீடுகள் 3 நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Plan to Investment of Insurance Company Rs 3 Thousand Crore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->