தமிழ்நாட்டிற்கு அக்.30 வரை நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் இன்று காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு 16,000 கன அடி வீதம் நீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துனர்.

அதனை ஏற்க மறுத்த காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு கர்நாடக அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் வீதம் நீர் திறக்க வேண்டும் என பரிந்துரை செய்தது. அதனை ஏற்க மறுத்து கர்நாடகா அரசு சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் நீர்த்திருக்க முடியாது என கூறிய கருத்தையும் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cauvery management board ordered to KA open 3000cub water to TN till Oct30


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->