நாட்டின் தலைநகரா? வரதட்சணை கொலைகளின் கூடாரமா? டெல்லியின் கொடூர முகம்...! - NCRB வெளியிட்ட அதிரடித் தகவல்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வரதட்சணைக் கொடுமைகள் இன்னும் குறையாத அதிர்ச்சி நிலை தொடர்கிறது என்பதை தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2024-ஆம் ஆண்டு அறிக்கை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. குறிப்பாக, வரதட்சணை காரணமாக நிகழும் உயிரிழப்புகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் நாடு முழுவதும் கவலைக்குரிய சூழலை உருவாக்கியுள்ளன.

அந்த அறிக்கையின் படி, வரதட்சணைக் கொலைகள் அதிகம் நிகழும் பெருநகரங்களின் பட்டியலில் நாட்டின் தலைநகர் டெல்லி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. 2024-ஆம் ஆண்டில் மட்டும் டெல்லியில் 111 பெண்கள் வரதட்சணைக் கொடுமைகளால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாகவும் இந்த பட்டியலில் டெல்லி முதலிடத்தை தக்கவைத்திருப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக, 2021-ஆம் ஆண்டில் டெல்லியில் 139 பெண்கள் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய மனிதாபிமான கேள்வியை எழுப்பியிருந்தது.இந்த பட்டியலில் உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 54 பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு பலியாகியுள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் 30 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து லக்னோ, ஜெய்ப்பூர், காசியாபாத், ஐதராபாத், பெங்களூரு, மும்பை மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களும் இந்த கவலைக்கிடமான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தின் தலைநகரமான சென்னை இந்த பட்டியலில் 11-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. சென்னையில் 2024-ஆம் ஆண்டில் 7 பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பு, குடும்ப அமைப்பின் நலன் மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்து இன்னும் பலத்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்பதை இந்த புள்ளிவிவரங்கள் மீண்டும் நினைவூட்டுகின்றன என சமூக அமைப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

capital country den dowry murders cruel face Delhi Breaking news released by NCRB


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->