இந்தியாவிற்குள் அமைச்சரவை மாற்றம்...? டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடி நடத்தும் 'மெகா' ஆலோசனைக் கூட்டம்...! - Seithipunal
Seithipunal


உலக அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் பதற்றமான சூழ்நிலை நீடித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லி சேவா தீர்தத்தில் முக்கிய மத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை முன்னிட்டு அனைத்து மத்திய அமைச்சர்களும் டெல்லியிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.சர்வதேச நாடுகளுக்கான பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ள பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த உயர்மட்ட ஆலோசனையில், அமைச்சரவை அமைச்சர்கள், தனிப்பொறுப்பு வகிக்கும் இணை அமைச்சர்கள் மற்றும் பிற இணை அமைச்சர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம், அதன் எதிரொலியாக இந்திய பொருளாதாரத்தில் உருவாகும் தாக்கங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் கூட்டத்தில் முக்கிய அம்சமாக எடுத்துரைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் சூழலில், எரிபொருள் விலை உயர்வு, விநியோகச் சங்கிலி பாதிப்பு, பணவீக்க அழுத்தம் போன்ற பொருளாதார சவால்கள் நாடு முழுவதும் கவலைக்குரிய விவாதமாக மாறியுள்ளன.

இதனுடன், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம் மற்றும் விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைகளும் இன்றைய கூட்டத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஜூன் மாத இரண்டாவது வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றம் அல்லது புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என மத்திய அரசின் நெருங்கிய வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cabinet reshuffle India Prime Minister Modi hold mega meeting Delhi this evening


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->