என்னது..!!! 17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்'என்ற பெயரா...!!! - உ.பி குஷிநகர்
born babies 17 girls named Sindoor UP Kushinagar
ஜம்மு -காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் , பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை ''ஆப்ரேஷன் சிந்தூர்'' என்ற நடவடிக்கை மூலம் அதிரடியாக தாக்கியது.

இந்த நடவடிக்கையில் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என 140 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் என்றென்றும் நினைவில் இருக்கும் வகையில், சமீபத்தில் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு சிலர் இப்பெயரை சூட்ட தொடங்கியுள்ளனர்.
அவ்வகையில் உத்தரபிரதேசத்தில் குஷிநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவர்களது குடும்பத்தினர் 'சிந்தூர்' என்று பெயரிட்டுள்ளனர்.
இதனை மருத்துவமனை முதல்வர் ஆர்.கே.ஷாஹி தெரிவித்தார்.இது தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
born babies 17 girls named Sindoor UP Kushinagar