பா.ஜனதா எத்தணை இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு! பொருளாதார நிபுணர் கணிப்பு.! - Seithipunal
Seithipunal


பிரபல பொருளாதார மற்றும் வாக்களிப்பியல் துறை நிபுணரான சுர்ஜித் பால்லா ஆய்வு நடத்தி வாக்காளர்களின் மனநிலை குறித்து புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர், நாடு முழுவதும் கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு இல்லாமல் தனி கட்சியாக பா.ஜ.க 330 முதல் 350 இடங்களில் வெற்றி பெறும். 

கடந்த 2019 தேர்தலை ஒப்பிடும்பொழுது வெற்றி பெறும் இடங்கள் ஐந்து முதல் ஏழு சதவீதம் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு அலை எதிர்ப்பு அலை என ஏதாவது இருக்கும். 

ஆனால் இந்த தேர்தலில் எந்த அலையும் இருக்காது. காங்கிரசைப் பொருத்தவரை 2014 தேர்தலில் பெற்றதை விட இரண்டு சதவீதம் குறைவாக பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. 

எதிர்கட்சிகளை பொறுத்த வரை கூட்டணிக்கு ஒரு தலைமையை தேர்வு செய்து முன்னிலைப்படுத்தியிருந்தால் போட்டி நிலவு இருக்கலாம் என கருதுகிறேன். 

பா.ஜ.க தொடர்ந்து பலவீனமாக இருக்கும் தமிழ்நாட்டில் கூட 5 இடங்களில் வெற்றி பெறும். அதற்கு மேல் வெற்றி பெற்றால் ஆச்சரியம் இல்லை. அதை போல் கேரளாவில் 1-2 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP win places Economist prediction


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->