கள்ளக்காதலி தூண்டுதலால் மனைவியை கொன்ற பாஜக தலைவர்...!
BJP leader who killed his wife instigation of lover
ராஜஸ்தான் அஜ்மீரைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ''ரோஹித் சைனி'',இவரது மனைவி சஞ்சு.இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், ரோஹித் அதே பகுதியைச் சேர்ந்த 'ரிது சைனி' என்ற மற்றொரு பெண்ணுடன் சிறிது காலமாக கள்ளத்தனமான உறவில் இருந்து வருகிறார்.

இவரது மனைவி சஞ்சு அவர்களின் திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்துள்ளார். இந்த மாதம் கடந்த 10 ஆம் தேதி, சஞ்சு சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் வீட்டில் இறந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரோஹித் முரண்பாடான பதில்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் 'வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் தனது மனைவியைக் கொன்று விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடிவிட்டதாக காவலர்களிடம் நம்ப வைக்க முயன்றார்.
ஆனால்,அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட காவலர்கள்,அவர்களது பாணியில் விசாரித்தபோது அவர் காதலி ரிதுவின் தூண்டுதலின் பேரில் கொலை செய்ததாக தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதில் ரோஹித் சைனியுடன், கொலையைத் தூண்டிய அவரது காதலி ரிது சைனியும் கைது செய்யப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.
English Summary
BJP leader who killed his wife instigation of lover