இட்லி கடை படத்தில் ஷாலினி பாண்டே தனுஷுக்கு தங்கச்சியாக...!
Shalini Pandey as Dhanushs younger sister movie Idli Kadai
பிரபல நடிகர் தனுஷ் தற்போது இயக்கி நடித்துள்ள படம் ''இட்லி கடை''. இப்படம் ஆரம்ப முதலில், ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக திட்ட மிட்டிருந்தது. இருப்பினும், சில பணிகள் இதுவரை முடியாத காரணத்தால் அது கொஞ்சம் தள்ளி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில்,வருகிற அக்டோபர் 1-ம் தேதி ''இட்லி கடை'' படம் தசரா விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
''அர்ஜுன் ரெட்டி'' பட கதாநாயகி ஷாலினி பாண்டே, தனுஷின் சகோதரியாகவும் அருண் விஜய்க்கு ஜோடியாகவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 100% காதல் படத்திற்குப் பிறகு 'ஷாலினி பாண்டே' நடிக்கும் 2 -வது தமிழ் படம் . மேலும், தனுஷுக்கு ஜோடியாக ''நித்யா மேனன்'' நடிக்கிறார். இப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. முக்கிய பங்காக ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
English Summary
Shalini Pandey as Dhanushs younger sister movie Idli Kadai