திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் மணப்பெண் எடுத்த விபரீத முடிவு...! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கோவை சூலூர் அருகே காசிகவுண்டன்புதூர் பகுதியில் ஒடிசாவை சேர்ந்த லம்போதர் மகிந்தா என்பவர் தனது 4 பிள்ளைகளுடன் வேலை செய்கிறார். இவரது 3-வது மகள் 18 வயது மீத்து மகிந்தா என்பவருக்கும் ஒடிசாவை சேர்ந்த 20 வயதான அஜித் என்பவருக்கும் நிச்சயமானது.

இன்னும் ஒரு வாரமே திருமணத்திற்கு இருப்பதால் திருமண ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக  நடந்து வந்தன.இந்நிலையில் மீத்து மகிந்தா வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியான பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீத்து மகிந்தாவை மீட்டு பார்த்தப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சூலூர் காவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காவலர்கள் மீத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து சூலூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

விசாரணையில்,"மீத்து மகிந்தா இதே கம்பெனியில் வேலை பார்க்கும் ஒடிசாவை சேர்ந்த 20 வயதான 'பப்லு' என்பவரும் காதலித்துள்ளனர்.கடந்த ஒராண்டுக்கு முன்பு பப்லு தனது சொந்த ஊருக்கு சென்றார். அதன் பிறகு அவர் திரும்பவில்லை.இந்நிலையில் தான் மீத்துவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானது.

இதனை ஊருக்கு சென்ற முன்னாள் காதலன் பப்லு அறிந்ததும்,கடந்த 15-ந் தேதி மீத்துவை திருமணம் செய்ய இருந்த அஜித்தின் செல்போனுக்கு, புதுப்பெண் மீத்துவுடன் தான் இருந்த புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.இதைக் கண்டு அதிர்ச்சியான அஜித், தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்று தெரிவித்து திருமணத்தை நிறுத்தி விட்டார்.

இதனால் மீத்துவுக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டநிலையில்,வீட்டில் இருந்த நீத்து யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.இது தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bride made bizarre decision just week left before wedding What happened


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->