OTT ரிலீஸ் தேதியை அறிவித்த 'மாரீசன்' படக்குழு... எந்த தளத்தில் வெளியாகிறது தெரியுமா?
team mareesan has announced OTT release date Do you know which platform it released on
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வைகைப்புயல் வடிவேலு மற்றும் மலையாள நடிகர் ''ஃபஹத் பாசில்'' இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ''மாரீசன்''. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.மேலும், இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கிய இப்படத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ளார்.
முக்கிய கதாபாத்திரங்களாக சித்தாரா, ஹரிதா, டெலிபோன் ராஜா, பி. எல். தேனப்பன், கோவை சரளா, விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த கதை,"ஒரு மறதி நோயாளிக்கும் திருடனுக்கும் உள்ள பயணத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது". இந்நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
English Summary
team mareesan has announced OTT release date Do you know which platform it released on