என் ஆதிக்கம் அங்கே இல்லாததால் படம் தோல்வி அடைந்தது! - சிக்கந்தர் படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ''ஏ.ஆர். முருகதாஸ்''.இவர் இந்தி திரையுலகில் பிரபல நடிகர் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' என்ற படத்தை இயக்கினார்.இப்படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் காஜல் அகர்வால், சத்யராஜ் மற்றும் சுனில் ஷெட்டி  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். இத்திரைப்படம்  வெளியாகிய பிறகு மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

இதைத்தொடர்ந்து இயக்குநர் ''ஏ.ஆர் முருகதாஸ்'' அடுத்ததாக 'சிவகார்த்திகேயன்' நடிப்பில் ''மதராஸி'' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.ஆகையால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

அண்மையில், நடந்த நேர்காணல் ஒன்றில் ''சிக்கந்தர்'' படத்தின் தோல்வியை குறித்து 'ஏ.ஆர் முருகதாஸ்' தெரிவித்ததாவது, "சிக்கந்தர் படத்தின் கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது.இருப்பினும் நான் நினைத்த கதையை என்னால் திரையில் கொண்டு வரமுடியவில்லை.

அதற்கு நான் மட்டும் பொறுப்பாக முடியாது அதற்கு படக்குழுவும் ஒரு காரணம்,  ஆதிக்கம் செலுத்தும் வகையில் என்னிடம் ஒரு யூனிட் மற்றும் குழு இருந்தால் அதை சாத்திய படுத்திருக்கலாம். அதனால் இது என்னுடைய தோல்வியல்ல"என்று தெரிவித்திருந்தார்.இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

film failed because my influence was not there AR Murugadoss film Sikandar


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->