வாக்கு திருட்டு போன்ற வார்த்தை பிரயோகம் அரசியலமைப்புக்கு அவமரியாதை! - ஞானேஷ் குமார்
Using words like vote theft disrespectful Constitution Gyanesh Kumar
தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டு செய்துள்ளதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஒரு புறம், பீகார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது ஒரு புறம் என்று தேர்தல் ஆணையம் தொடர் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் டெல்லியில், இன்று பிற்பகலில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.அவ்வகையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நிருபர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது,"எங்கள் கடமைகளிலிருந்து ஒருபோதும் தவறமாட்டோம். அரசியல் கட்சிகளுக்கு இடையே நாங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை.
ஒட்டுமொத்த தேர்தல் சீர்திருத்தத்தின் ஒரு பகுதி தான் SIR நடவடிக்கை. பீகாரின் SIR நடவடிக்கையில் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குள்ளது.இந்த விவகாரத்தில் போலியான, உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும்.வாக்கு திருட்டு போன்ற வார்த்தை பிரயோகம் அரசியலமைப்புக்கு அவமரியாதை. எதிர்க்கட்சிகளின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம்.
எதிர்க்கட்சிகள் தங்கள் புகாரை தெளிவாக வரையறுத்துக் தெரிவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
English Summary
Using words like vote theft disrespectful Constitution Gyanesh Kumar