பட்டியலின மக்களை குறிவைத்து களமிறங்கும் பாஜக! தேர்தல் வியூகம் எடுபடுமா! - Seithipunal
Seithipunal


பட்டியல் இனத்தவர் அதிகம் உள்ள 70 ஆயிரம் வாக்குச்சாவடிகளை குறி வைக்கும் பாஜக!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பல்வேறு கட்சிகளும் கள பணியை தொடங்கிவிட்டது. ஆளுங்கட்சியான பாஜகவும் தனது கள வியூகங்களை அமைத்து வருகிறது. 

மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலிலும் வெற்றி பெறுவது குறித்தும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி பெற ஆலோசனைக் கூட்டங்கள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தேசிய தலைவர் ஜெபி.நட்டா ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்த கூட்டத்தில் பாஜக பொதுச் செயலாளர் சந்தோஷ் மற்றும் சமீபத்தில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி, பிப்லப் குமார் தேவ், பொதுச்செயலாளர் அருண் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் பேசிய ஜெ.பி நட்டா "நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். நமது சித்தாந்தங்கள் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற முடியும். தொடர்ந்து பல்வேறு அறிவுகளை வழங்கியவர் பூத் கமிட்டி வியூகங்கள் பற்றி பேசினார். பூத் கமிட்டி வியூகங்கள் மற்றும் எஸ்சி எஸ்டி ஓபிசி மக்களை உள்ளடக்கிய பூத் மேலாண்மை குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு கட்சி இழந்த 144 இடங்களை அடையாளம் கண்டு அந்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் கட்சியை பலப்படுத்த முடியும் என மாநில பொறுப்பாளர்களிடம் ஜெபி.நட்டா பேசியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி தனது "எஸ்சி மோர்ஜா" மூலம் "பஸ்தி சம்பிரக் அபியான்" திட்டத்தை தொடங்கியுள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம் பட்டியல் இனத்தவர்கள் அதிகம் உள்ள 70 ஆயிரம் வாக்குச்சாவடிகளை அடையாளம் கண்டு கட்சியை பலப்படுத்துவது சம்பந்தமாக கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

எஸ்சி எஸ்டி மக்கள் அதிகம் உள்ள 70 ஆயிரம் வாக்குச்சாவடிகளை பாஜக குறி வைத்து கள வியூகம் அமைந்துள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி எஸ்டி மக்களை மட்டுமே கணக்கெடுப்போம் என உறுதிபடக் கூறியுள்ளது. 

இதனால் நாட்டில் உள்ள எஸ்சி எஸ்டி மக்களின் வாக்கு வங்கியை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP is targeting the scheduled people Will the election strategy be taken


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->