நாட்டையே அதிரவைத்த ரயில் விபத்து., உயரும் பலி எண்ணிக்கை.!  - Seithipunal
Seithipunal



ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு புறப்பட்ட கவுகாத்தி-பிக்கானர் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்கு வங்க மாநிலத்தில் தரம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாக்கியது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானர் பகுதியில் இருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி செல்லக்கூடிய இந்த விரைவு ரயில், மேற்கு வங்க மாநிலத்தில் தடம்புரண்டது. இந்த ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டு உள்ளது.

இந்த விபத்தில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 45 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தாக வடகிழக்கு ரெயில்வே, தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bikaner Guwahati Express Derail


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->