ஆன்மீக, சுற்றுலா தலமான கயா பெயர் மாற்றம்: பீகார் அமைச்சரவை ஒப்புதல்..!
Bihar Cabinet approves name change of spiritual and tourist destination Gaya
பீகார் மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாத் தலம் மற்றும் மத ரீதியிலான நகரம் கயா. கயா சிட்டி என்று அழைக்கப்படும் கயா நகரம் இனிமேல் கயா ஜீ (Gaya Jee) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் பெயர் மாற்ற பரிந்துரை வந்த நிலையில் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
-xh3jq.png)
மேலும், புற்றுநோயை தடுக்கும் வகையிலும், சிகிச்சை அளிக்கவும் பீகார் புற்றுநோய் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி சொசைட்டி அமைக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பீஹாரின் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் பிறந்த நாளான ஜனவரி 05-ஆம் தேதி அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடவும் அமைச்சரவை ஒப்புதல் அழித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Bihar Cabinet approves name change of spiritual and tourist destination Gaya