ஒரே கிராமத்தில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு.!
4 people are affected by dengue in the same village
ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் உள்பட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஆங்காங்கே டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருவது மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து, மாவட்டத்தில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் உள்பட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.அவர்களை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் , அந்தியூர் காலனியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, 100 -க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.மேலும், அந்தியூர் காலனி பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று, வீட்டில் இருப்பவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வரப்படுகிறது.அப்பகுதியில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, மருந்து தெளிக்கப்பட் டுள்ளது. அங்கு சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
4 people are affected by dengue in the same village