அந்தியூரில் பரபரப்பு!!! டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர்...! காரணம் என்ன?
There stir Anthiyur 4 people from same village infected with dengue
கடந்த 2 தினங்களாக, ஈரோடு புறநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில், மழையின் காரணமாக ஆங்காங்கே டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, ஈரோடு முழுவதும் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதனிடையே, ஈரோடு அந்தியூர் காலனியில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் உள்பட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து அவர்கள், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.
மேலும், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இதன் நடுவே, அந்தியூர் காலனியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, 100 -க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதார அலுவலர் அருணா:
இதுதொடர்பாக மாவட்ட சுகாதார அலுவலர் அருணா தெரிவித்ததாவது,"அந்தியூர் காலனியில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும், அந்தியூர் காலனி பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று, வீட்டில் இருப்பவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வரப்படுகிறது.
அப்பகுதியில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. அங்கு சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
There stir Anthiyur 4 people from same village infected with dengue