கடந்த 20 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வலுவான மாற்றத்தை அடைந்துள்ளது; பெல்ஜியம் பிரதமர் புகழாரம்..! - Seithipunal
Seithipunal


அரசு முறைப் பயணமாக, பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் இந்தியா வந்துள்ளார். டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து இரு தரப்பு உயர் மட்டத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டுச் சந்திப்பும் நடைபெற்றது. இதில், இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியும், பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பெல்ஜியம் பிரதமர் கூறியதாவது;

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா வந்துள்ள முதல் பெல்ஜியம் பிரதமர் தான தான் என்றும், எனது இந்த வருகை மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறதாகவும், 20 ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலம். இந்த 20 ஆண்டுகளில் குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா மிகப் பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளதாக இந்தியாவை பாராட்டியுள்ளார்.

அத்துடன், இன்று இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக மட்டுமல்லாமல், மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார சக்தியாகவும் திகழ்கிறதாகவும், ஒரு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வல்லரசாகவும், உலக அளவில் வலுவான குரலைக் கொண்ட ஒரு முக்கிய புவிசார் அரசியல் சக்தியாகவும் இந்தியா உருவெடுத்துள்ளதாக இந்தியாவை புகழ்ந்துள்ளார்.

மேலும், பெல்ஜியத்தைப் பொறுத்தவரை, இந்தியா ஒரு முக்கியமான கூட்டாளி நாடு என்றும், இந்தியாவுக்கு அளிக்க எங்களிடம் பல சிறப்பம்சங்கள் உள்ளன என்று தான் நம்புவதாகவும், அளவின் அடிப்படையில் நாங்கள் சிறிய நாடாக இருந்தாலும், உலகிலேயே மிகவும் வெளிப்படையான, சர்வதேச அளவில் வலுவான தொடர்புகளைக் கொண்ட பொருளாதாரங்களில் ஒன்றாக நாங்கள் (பெல்ஜியம்) திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனது இந்தியா வருகையின் நோக்கம் வர்த்தகத்தைத் தாண்டி விரிவானது என்றும், பெல்ஜியம் மற்றும் இந்தியா இடையிலான உறவை பொருளாதாரம், அரசியல் மற்றும் உத்தி ரீதியாக அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும், இன்று நாம் நிச்சயமற்ற உலகில் வாழ்கிறோம். செழிப்பும் பாதுகாப்பும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை என்றும், தங்கள் உறவு ஏற்கனவே ஆழமான வேர்களைக் கொண்டுள்ளதாகவும், இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையிலான வர்த்தகம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 235 பெல்ஜிய நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன என்றும், இந்தியாவைச் சேர்ந்த 95 நிறுவனங்கள் பெல்ஜியத்தில் செயல்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார். சரக்குகள் சார்ந்த இருதரப்பு வர்த்தகம் 9.4 பில்லியன் யூரோக்களாக உள்ளது. இதில் மேலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பெல்ஜியத்தில் கையெழுத்தாகவுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறதாகவும், பிரதமர் மோடியை எனது நாட்டில் வரவேற்கும் பெருமையும் எங்களுக்கு கிடைக்கும். பிரதமர் மோடியுடன் உரையாடலைத் தொடர அவரது வருகை ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்று நாம் ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்டுள்ளோம். நமது உறவின் மிகச் சிறந்த கட்டம் இனிமேல்தான் வர இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

இந்தியா அபாரமான அளவு, திறமை, லட்சியத்தைக் கொண்டுள்ளது. பெல்ஜியம் தொழில்நுட்பம், சிறப்பு நிபுணத்துவம், அனுபவம் மற்றும் ஐரோப்பாவுக்கான அணுகலை வழங்க முடியும். இதற்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று பெல்ஜியம் பிரதமர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Belgian PM praises India for strong transformation under PM Modis leadership in the last 20 years


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->