30 மற்றும் 31-ந் தேதிகளில் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில், வாரத்தில் 5 நாட்கள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு வங்கிகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. 

இந்த நிலையில், நேற்று வேலை நிறுத்தம் குறித்து மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அப்போது எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. 

இது தொடர்பாக, அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சிஎச்.வெங்கடாசலம் தெரிவித்ததாவது:-  "சமரச பேச்சுவார்த்தை நடத்தியதில் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. 

அதாவது, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புடன் 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்திய வங்கிகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால், வங்கி ஊழியர்கள் அனைவரும் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bank staffs strike on january 30 and 31st


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->