சவுக்கடி கொடுத்த இளைஞன்! திருந்துமா கர்நாடக அரசு! - Seithipunal
Seithipunal


பெங்களூரு : ஆரிஃப் மவுத்கில் என்ற இளைஞர், வங்கியில் கடன் வாங்கி சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைத்து வருகிறார்.

அப்பாவி மக்கள் சாலைவிபத்தில் படுகாயமடைந்தும், அந்த பகுதி கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி யாரும் கண்டுகொள்ளாத நிலையில், இளைஞர் இந்தனை முன்னெடுத்துள்ளார். 

பெங்களூரு கிழக்குப் பகுதி : 'குடிமக்கள்' குழு என்ற அமைப்பு' என்ற அமைப்பு, NoDevelopment NoTax என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதுடன், அந்த பகுதிகளில் உள்ள சாலை பள்ளங்களை சீரமைப்பது, குப்பையை அள்ளுவது போன்ற சமூக பணிகளையும்  மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பைச் சேர்ந்த ஆரிஃப் மவுத்கில் என்ற இளைஞர், ரூ.2.7 லட்சம் வங்கியில் கடன் வாங்கி, ஹொசா சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த சாலை பள்ளங்களை சீரமைக்கக்கோரி பல முறை மனு அளித்தும், எம்.எல்.ஏ., கவுன்சிலர், எம்.பி., ஆகியோரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இவரே இந்த பணியை செய்ய களமிறங்கியுள்ளார்.

மேலும், குப்பை அள்ளுவது, கழிவு நீரை அகற்றுவது போன்ற பணிகளையும் தனது அமைப்புடன் இணைந்து இந்த இளைஞர் மேற்கொண்டு வருகிறார். 

இளைஞர் ஆரிஃப் மவுத்கிலின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவிக்கும் நிலையில், அம்மாநில அரசு இதை பார்த்தாவது இனி திருந்தி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bangalore young man do some public work


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->