அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள் இன்று.. நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.!!
atal bihari vajpayee birthday 2020
சுதந்திர இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி, அடல் பிஹாரி வாஜ்பாய் 1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியரில் பிறந்தார்.
இவர் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 3 முறை பிரதம மந்திரியாகவும் இருந்தார். மேலும் இவர் மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) நிறுவியவர் இவரே.

இவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, லோகமான்ய திலகர் விருது, சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது, பாரத ரத்னா விருது எனப் பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி மறைந்தார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களும் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
English Summary
atal bihari vajpayee birthday 2020