அடுத்த தலாய் லாமா தேர்வு விவகாரத்தில் சீனா ஏன் ஆட்சேபனை தெரிவிக்கிறது..? இதில் அவர்களுக்கு பங்கு கிடையாது: அருணாச்சல் முதல்வர் கருத்து..!
Arunachal CM comments on why China objects to the selection of the next Dalai Lama
அடுத்த தலாய் லாமா தேர்வு செய்வதில், சீனாவுக்கு எந்த பங்கும் இல்லை எனவும், அவர் சுதந்திரமான சமூகத்தில் பிறந்திருப்பார் என அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு கூறியுள்ளார்.
தற்போதைய 14-வது தலாய் லாமா இன்னும் 40 ஆண்டுகள் வாழ வேண்டிக் கொள்கிவதாகவும், அவர் ஆரோக்கியமாக உள்ளார் என்றும், அவரின் 90-வது பிறந்த நாளின் போது கூட, 130 வயது வரை வாழ்வேன் என்று கூறியுள்ளார். இதற்காக நாம் வேண்டிக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
-er9zr.png)
தற்போதைய தலாய் லாமாவின் காலத்துக்கு பிறதே புதிய தலாய் லாமா தேர்வு செய்யும் பணி தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அடுத்த தலாய் லாமாவின் பிறப்பிடம் எது என்பதில் நிச்சயமற்ற தன்மை உள்ளதாகவும், அவர் சுதந்தரமான சமூகத்தில் இருந்து வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த தலாய் லாமாவின் தேர்வு விவகாரத்தில் சீனா ஏன் ஆட்சேபனை தெரிவிக்கிறது என தெரியவில்லை எனவும், அவர்களுக்கு என தனி கொள்கை உள்ளது. தலாய் லாமா நிறுவனங்கள், இமயமலை பகுதியிலும், திபெத்திலும் மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ளது. இதில் சீனாவுக்கு எந்த பங்கும் கிடையாது என்று அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு சுட்டிக்காட்டியுள்ளார்.
English Summary
Arunachal CM comments on why China objects to the selection of the next Dalai Lama