தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் பிரமாண்டம்; 26 லட்சம் தீபங்கள் ஏற்ற ஏற்பாடு..!
Arrangements to light 26 lakh lamps in Ayodhya on the occasion of Diwali
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் 20-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, அயோத்தியில் நாளை 19-ஆம் தேதி 26 லட்சம் தீபங்கள் ஏற்றி வரலாறு சாதனை படைக்க பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அயோத்தியின் சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி, கின்னஸ் உலக சாதனை படைக்கும் விழாவுக்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாளை நடக்கும் இந்த 26 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றும் விழாவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடவுள்ளனர்.
கடந்த 2024-ஆம் ஆண்டு தீபாவளிக்கு 25 லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள் ஏற்றப்பட்டு, இரண்டு கின்னஸ் உலக சாதனைகள் படைக்கப்பட்டன. அதனை முறியடித்து புதிய சாதனை படைக்கும் நோக்கத்துடன் இந்தாண்டு தீபத்திருவிழா ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு களமிறங்கியுள்ளது.
English Summary
Arrangements to light 26 lakh lamps in Ayodhya on the occasion of Diwali