பக்ரீத்திற்கு சென்ற ராணுவ வீரர்விபரீதம்.! நினைவுக்கு வரும் 2017ஆம் ஆண்டின் கோரம்.!  - Seithipunal
Seithipunal


பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்ற இராணுவ வீரர் மாயமாகியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162 ஆவது படைப் பிரிவை சேர்ந்த ரைபிள் மேன் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போய் உள்ளார். காணாமல் போன அந்த வீரரின் பெயர் சாகிர் மன்சூர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

அவர் தீவிரவாத குழுக்களால் கடத்தப்பட்டு இருக்கலாம் என இந்திய ராணுவத் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. காணாமல் போன சாஹிர் மன்சூரின் கார் எரிந்த நிலையில் குல்கம் மாவட்டத்தில் ரம்பா பகுதி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

எனவே அவர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவத் தரப்பில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ட்ரோன் கேமராக்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளது இந்திய ராணுவம். இதேபோன்று கடந்த 2017 ஆம் ஆண்டு சோபியான் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற பொழுது ராணுவ வீரர் உமர் பயாஸ் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

army men missing in kashmir sofiyan district 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->