முதல்வர் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.!! - Seithipunal
Seithipunal


சிவில் லைன்ஸ், பிளாஸ் ஸ்டாப் சாலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடு அமைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் பெய்த கனமழையின் காரணமாக, முதல்வர் வீட்டின் ஒரு அறையில் இருக்கும் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த அறையில் தான் பல முக்கிய கூட்டங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

நல்லவேளையாக அங்கு பராமரிப்பு பணிகள் நடந்து வந்த காரணத்தால் மேற்கூரை இடிந்த போது, அங்கு யாரும் இல்லை. மேலும், அறைக்கு அருகே அமைந்துள்ள கழிப்பறையின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.

கடந்த 1942ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வீட்டில், 2015ம் ஆண்டில், இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற போது அரவிந்த் கெஜ்ரிவால் குடியேறினார். முதல்முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியேற்ற போது, திலக் லேனில் இருக்கும் 3 பெட்ரூம் கொண்ட வீடு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aravind Kejriwal house damage


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal