திருமணம் முடிந்து வருகையில் அரங்கேறிய விபத்து.. பரிதாபமாக பறிபோன 7 உயிர்கள்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோதாவரி மாவட்டம் தண்டிகொண்டா மலைக்கோவிலில் வைத்து, அப்பகுதியை சார்ந்த இளம் ஜோடிக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் நிறைவு பெற்றதும், திருமண வீட்டார்கள் மலையில் இருந்து கீழே வேன் மூலமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், திடீரென வேனின் பிரேக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தறிகெட்டு இயங்கிய வேன், கட்டுப்பாட்டினை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andra Pradesh Godavari Van Accident Peoples Died


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal