ஊழல் புகாரில் சிக்கிய ஆந்திர மாநில முன்னாள் முதல்வர்.! போலீசார் அதிரடி.!
andira formar minister chandirababu naidu arrest
ஊழல் புகாரில் சிக்கிய ஆந்திர மாநில முன்னாள் முதல்வர்.! போலீசார் அதிரடி.!
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் புகாரில் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாநில அரசு திறன் மேம்பாட்டுத்துறையில் ஊழல் நடந்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது வாரண்டுக்கான உத்தரவை சிஐடி அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவிடம் வழங்கியுள்ளனர்.

அதிகாலை 3.30 மணிக்கு கெஸ்ட் அவுசுக்கு சென்ற குற்றப்பிரிவு போலீசார் சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்தனர். அவரைக் விஜயவாடா சிறைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, நான் தாக்கப்படுவேன் அல்லது கைது செய்யப்படுவேன் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
andira formar minister chandirababu naidu arrest