அரசியலில் இருந்து அமித்-ஷா ஓய்வு பெற்ற பின் என்ன செய்வார்..? அவரே கூறிய தகவல்..! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா. பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் அவரது இடத்தை  அமித் ஷா நிரப்புவார் என்று, பாஜ., தொண்டர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், அமித் ஷா, தனது ஓய்வுக்குப் பிறகான திட்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதும், வேதம், உபன்யாசம் மற்றும் இயற்கை விவசாயத்தில் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.  குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜ கட்சியின் மகளிரணியினர் மற்றும் கூட்டுறவுத் துறையை சேர்ந்த பெண்கள் முன்னிலையில் அமித்-ஷா இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இரசாயன உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் கோதுமையால் புற்றுநோய், ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்னைகள் வருகின்றன. ஆகவே, இரசாயன உரங்கள் கலக்காத உணவுகளை சாப்பிட்டால், நாம் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இயற்கை விவசாயம், நோயைக் குறைப்பது மட்டுமல்லாமல் பயிர் உற்பத்தித் திறனையும் மேம்படுத்துகிறது என்றும், அவருடைய சொந்த பண்ணையில் இயற்கை விவசாயம் செய்து வருவதாகவும், அதில் மகசூல் கிட்டத்தட்ட 1.5 மடங்கு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிக மழை பெய்யும் போது, ​​பொதுவாக பண்ணையில் இருந்து தண்ணீர் வெளியேறும். ஆனால் இயற்கை விவசாயத்தில், ஒரு துளி கூட தண்ணீர் வெளியேறாது என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால் இயற்கை விவசாயம் நீர்ப்பிடிப்பு பாதைகளை உருவாக்க அனுமதிக்கிறது.

அதிகப்படியான உரங்களைப் பயன்படுத்துவது அந்த நீர்ப்பிடிப்பு பாதைகளை அழித்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், மண்புழுக்கள் இயற்கை உரங்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால், செயற்கை உரங்கள் அவற்றை அழித்து விட்டன என்றும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah himself revealed what he will do after retiring from politics


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->