வாக்கு திருட்டு குற்றசாட்டு!ராகுல் காந்தி ஆதாரத்துடன் நேரில் வரணும்.. தேர்தல் ஆணையம் அதிரடி!
Allegations of vote rigging Rahul Gandhi must appear in person with evidence Election Commission takes action
கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் வாக்குத் திருட்டு நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் பொய்யானவை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா, ராகுல் காந்திக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி, குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை நாளை (ஆகஸ்ட் 8) நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
“1 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன” – ராகுல்
சமீபத்தில் ராகுல் காந்தி,“மகாதேவபுரா தொகுதியில் 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டன. 12,000 போலி வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இது தேர்தல் ஆணையத்தின் தோல்வியையும் பாஜகவின் மோசடியையும் காட்டுகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்,”
என்று குற்றம்சாட்டினார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதிலும் தேர்தல் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
ஆதாரங்கள் தராவிட்டால் சட்ட நடவடிக்கை
மனோஜ் குமார் மீனா அனுப்பிய கடிதத்தில், குற்றச்சாட்டுகளுக்கான வாக்காளர் பெயர்கள் மற்றும் விவரங்களை கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் வழங்குமாறு ராகுல் காந்தி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
சமர்ப்பிக்க தவறினால், வாக்காளர் பதிவு விதிகள் 2020, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா 2023 கீழ் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த குற்றச்சாட்டுகள் பொதுமக்களில் தவறான எண்ணத்தை உருவாக்கி, தேர்தல் முறையின் நம்பகத்தன்மையை பாதிக்கக் கூடும் என தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் பதில்
மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அலுவலகமும் இதேபோல் கடிதம் அனுப்பி, 1960-ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 20(3)(b) கீழ் உறுதிமொழி மற்றும் விவரங்களை கேட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி,“தேர்தல் ஆணையத்தின் மறுப்பு, மோசடியை மறைக்கும் முயற்சி. நாங்கள் ஆதாரங்களை சமர்ப்பிப்போம்,”
என்று தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி பதிலளிக்கையில்,“இது எங்கள் தரவு அல்ல, அவர்களின் தரவு. அதை அனைவருக்கும் காட்டுகிறோம். இதை ஒரு சத்தியப் பிரமாணமாக எடுத்துக் கொள்ளுங்கள்,”
என்று வலியுறுத்தினார்.
English Summary
Allegations of vote rigging Rahul Gandhi must appear in person with evidence Election Commission takes action