தெலுங்கானாவிற்கு வந்த அகிலேஷ் யாதவ்; பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் கே.டி.ராமாராவுடன் சந்திப்பு..!
Akhilesh Yadav who arrived in Telangana met with KT Rama Rao who holds an anti-BJP stance
தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியை இழந்தது. அதேபோன்று உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் சறுக்கலைச் சந்தித்தது. மேலும், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களைக் கைப்பற்றி சமாஜ்வாதி கட்சி பெரும் சக்தியாக உருவெடுத்தது. இந்நிலையில், ஐதராபாத் வந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவை (கேடிஆர்) நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.
குறித்த சந்திப்பின்போது பேசிய கேடிஆர், ‘சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றத்தில் 37 எம்பிக்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாகத் திகழும் உங்களையும், உங்கள் கட்சியையும் பார்க்கும்போது எங்களுக்கு உத்வேகம் பிறக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாங்களும் மீண்டும் எழுச்சி பெற்று ஆட்சியைப் பிடிப்போம்’ என்று நம்பிக்கையாக பேசியுள்ளார். பிஆர்எஸ் கட்சித் தலைவர் கே.சந்திரசேகர ராவின் (கேசிஆர்) உடல்நலம் குறித்து விசாரித்த அகிலேஷ் யாதவ், இது அரசியல் தாண்டி தனிப்பட்ட முறையிலான நட்பு ரீதியான சந்திப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் இது குறித்து பேசுகையில், 'அரசியலில் வெற்றி தோல்வி என்பது காலச் சக்கரம் போன்றது; மக்களுடன் தொடர்பில் இருந்தால் மீண்டும் ஆதரவைப் பெறலாம்.' என்று கூறியுள்ளார்.

அத்துடன், பிரித்தாலும் எதிர்மறை அரசியலை விடுத்து, வளர்ச்சி மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நேர்மறையான அரசியலே தற்போதைய தேவை’ என்று அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.. முன்னதாக அகிலேஷ் யாதவ் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகிலேஷ் யாதவ், அக்கூட்டணியில் கூட்டணியில் அங்கம் வகிக்காத மற்றும் பாஜகவுக்கு எதிரான நிலைபாட்டில் இருக்கும் பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவை சந்தித்த்துள்ளமை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Akhilesh Yadav who arrived in Telangana met with KT Rama Rao who holds an anti-BJP stance