பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: ஏர் இந்தியா விமான சேவை 05 சதவீதம் குறைப்பு..!
Air India flight services reduced by 05 percent
ஆமதாபாத் விமான விபத்தினை தொடர்ந்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவை மீது பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளது. தொடர்ந்து, தொழில்நுட்ப கோளாறு, விமானம் மீது பறவை மோதல், எரிபொருள் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்ட சம்வபங்கள், அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவங்களால் பயணிகளின் பாதுகாப்பு பற்றிய நிறைய கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் அதன் விமான சேவைகளை 05 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் முன்பதிவு செய்தோர் மற்றும் அதில் பயணிக்க முன்னரே திட்டமிட்ட பலர், மாற்று விமான நிறுவனங்களின் சேவையை நாட ஆரம்பித்துள்ளனர்.
தற்போது பல்வேறு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் உள்ள நகரங்களுக்கான விமான சேவையை ஜூலை 15-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யவுள்ளதாகவும், அதன் சேவைகளை குறைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இதற்கான ஆர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:
சர்வதேச அளவில் ஏர் இந்தியாவின் ஒட்டுமொத்த விமான சேவையில் 05 சதவீதம் பயணங்கள் தற்காலிகமாக குறைக்கப்படுகிறது. இது தாமாக முன் வந்து எடுக்கப்பட்ட முடிவாகும். குறிப்பாக 03 வழித்தடங்களிலும் தற்காலிகமாகவும், 19 வழித்தடங்களில் விமான சேவைகளும் குறைக்கப்படுகின்றன. இந்த அறிவிப்பு குறைந்தபட்சம் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
தற்காலிக சேவை குறைப்புகள் இருந்தாலும், தினமும் 600 விமானங்களை தொடர்ந்து இயக்கும். 120 உள்நாட்டு, குறுகிய மற்றும் சர்வதேச வழித்தடங்களில் சிறிய வணிக விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா கூறியுள்ளது.

ஜூலை 15, 2025 வரை ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள் விவரம் கீழ் வருமாறு:
பெங்களூரு-சிங்கப்பூர் (AI 2392/2393) - வாரம்தோறும் 7 சேவைகள்
புனே-சிங்கப்பூர் (AI 2111/2110) - வாரம்தோறும் 7 சேவைகள்
மும்பை-பாக்டோக்ரா (AI 551/552) - வாரம்தோறும் 7 சேவைகள்
ஜூலை 15, 2025 வரை குறைக்கப்பட்ட விமான சேவைகள் விவரம்; (ஏற்கனவே இருந்த விமான சேவைகள் அடைப்புக் குறிக்குள்)
பெங்களூரு-சண்டிகர்; வாரம்தோறும் 7 சேவைகள் (14)
டில்லி-பெங்களூரு: வாரம்தோறும் 113 சேவைகள் (116)
டில்லி-மும்பை: வாரம்தோறும் 165 சேவைகள் (176)
டில்லி-கொல்கத்தா: வாரம்தோறும் 63 சேவைகள் (70)
டில்லி-கோயம்புத்தூர்: வாரம்தோறும் 12 சேவைகள்( 13)
டில்லி-கோவா (டபோலிம்): வாராந்திரம் 7 சேவைகள் (14)
டில்லி-கோவா (மோபா): வாரம்தோறும் 7 சேவைகள்( 14)
டில்லி-ஹைதராபாத்: வாரம்தோறும் 76 சேவைகள்( 84)
டில்லி-இந்தூர்: வாரம்தோறும் 14 சேவைகள் (21)
டில்லி-லக்னோ: வாரம்தோறும் 21 சேவைகள்(28)
டில்லி-புனே: வாரம்தோறும் 54 சேவைகள் (59)
மும்பை-ஆமதாபாத்: வாரம்தோறும் 37 சேவைகள் (41)
மும்பை-பெங்களூரு: வாரம்தோறும் 84 சேவைகள்(91)
மும்பை-கொல்கத்தா: வாரம்தோறும் 30 சேவைகள்(42)
மும்பை-கோயம்புத்தூர்: வாரம்தோறும் 16 சேவைகள்(21)
மும்பை-கொச்சி: வாரம்தோறும் 34 சேவைகள் (40)
மும்பை-கோவா (டபோலிம்): வாரம்தோறும் 29 சேவைகள் (34)
மும்பை-ஹைதராபாத்: வாரம்தோறும் 59 சேவைகள் (63)
மும்பை-வாரணாசி: வாரம்தோறும் 7 சேவைகள் (12)

இத்தகைய மாற்றங்களால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் மாற்று விமானங்கள் மூலம் பயணம் அல்லது பயணக்கட்டணம் முழுமையாக திருப்பி தருதல் போன்ற வசதிகள் செய்து தரப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், புதிய விமான சேவைகள் கால அட்டவணை, ஏர் இந்தியாவின் வலைதளமான airindia.com-இல் பதிவேற்றப்பட்டுள்ளது. வெகு விரைவில் முழுமையான விமான சேவைகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் வகையிலும், பயணிகள், விமானிகள், சிப்பந்திகள் பாதுகாப்பில் உறுதியாக உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
English Summary
Air India flight services reduced by 05 percent