மீண்டும் மீண்டும் பீதியை கிளப்பும் ஏர் இந்தியா விமானம்: டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது தீப்பிடித்துள்ளதால் அச்சம்..!
Air India flight from Hong Kong catches fire after landing at Delhi airport
ஹாங்காங்கிலிருந்து டில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் டில்லி விமான நிலையத்தில் தரை இறங்கிய போது தீப்பிடித்துள்ளது. ஏர் விமானம் பத்திரமாக தரையிறங்கிய பின்னர், சிறிது நேரத்திலேயே துணை மின் அலகு (APU) தீப்பிடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
குறித்த தீ விபத்தினால் விமானத்தில் சில சேதங்கள் ஏற்பட்ட போதிலும், பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்திலிருந்து பாதுகாப்பாக இறங்கியுள்ளனர். தற்போது, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது என ஏர் இந்தியா விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
விமானம் தரையிறங்கிய பிறகு தீ விபத்து ஏற்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக விமானத்தில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வவருகின்றமை பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Air India flight from Hong Kong catches fire after landing at Delhi airport