தமிழ்நாட்டுக்கு பின் கேரளாவும் நீதிமன்றம் கதவைத் தட்டியது...! - கேரளா அரசின் அதிரடி மனு
After Tamil Nadu Kerala also knocked on the courts door Kerala governments urgent petition
கேரளா மாநில அரசு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை ஒத்திவைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவில், “தற்போதைய தீவிர திருத்த நடவடிக்கை அடுத்த மாதம் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களை பாதிக்கக்கூடும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் மனு, நீதிபதி அருண் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அதில் அரசு தரப்பில் ஆஜராகிய அட்வகேட் ஜெனரல், “எங்கள் நோக்கம் தீவிர திருத்தத்தை எதிர்ப்பது அல்ல, அதை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டுமெனும் கோரிக்கையே” என்று விளக்கமளித்தார்.
வாதங்களை கேட்ட பின், நீதிபதி, “இந்த விவகாரத்தில் இறுதி தீர்மானம் எடுப்பது உச்ச நீதிமன்றத்தின் கீழ் வரும். ஏனெனில், பிற மாநிலங்களும் இதேபோன்ற மனுக்களை ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன,” என்று குறிப்பிட்டார்.
மேலும், கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.இந்த வழக்கில் இறுதி உத்தரவு நாளை வெளிவரும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.குறிப்பாக, இதற்கு முன் தமிழ்நாடு அரசு கூட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
After Tamil Nadu Kerala also knocked on the courts door Kerala governments urgent petition