காரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கேட்ட பங்க் ஊழியர்.. கார் ஏற்றிக் கொலை.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசத்தில் நிரப்பப்பட்ட பெட்ரோலுக்கு பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் காரை ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஷிகாஹோமோகா பகுதியில் நடந்துள்ளது. நேற்று இரவு பத்து முப்பது மணிக்கு 4 பேர் காரில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளனர். பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த 50 வயது ஷேர் சிங் என்ற நபர் ₹.1020 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பினார். 

பெட்ரோல் நிரப்பி விட்டு காரில் இருந்தவர்களிடம் பணம் கேட்டபோது, அவர்கள் பணம் செலுத்தாமல் தப்பி ஓட முயற்சித்தனர். இதனை தொடர்ந்து, அவர் காரை பின் தொடர்ந்து ஓடினார். அப்பொழுது காரை ஓட்டிய நபர் அவர் மீது காரை ஏற்றியதில் அவர் பலத்த காயமடைந்தார். 

இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காரில் இருந்த 4 பேரையும் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

After filling the car with petrol and asking for money, the bunk worker killed the car.


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal