ஆம் ஆத்மி கட்சி உடைந்தது! உருவாகும் புதிய கட்சி! 13 கவுன்சிலர் ராஜினாமா!
Aam Aadmi Party Councillor Resignation new party soon
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் ஒரே நேரத்தில் பதவியை ராஜினாமா செய்தது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் அனைவரும் முன்னாள் அவைத்தலைவர் முகேஷ் கோயல் தலைமையில் புதிய கட்சி ஒன்றை நிறுவுவதாக அறிவித்துள்ளனர். அந்தக் கட்சிக்கு ‘இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி’ என பெயரிடப்பட்டுள்ளது.
முன்னதாக, முகேஷ் கோயல், டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சியின் அவை தலைவராக இருந்தவர்.
இதையடுத்து, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அவர் ஆம் ஆத்மியின் சார்பில் போட்டியிட்டபோது தோல்வியை சந்தித்தார்.
தற்போது, அவரது வழியில் 13 கவுன்சிலர்களும் கட்சியை விட்டு விலகி, புதிய அரசியல் முயற்சியில் களமிறங்குவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் டெல்லி நகராட்சியில் ஆம் ஆத்மிக்கு புதிய சவால்கள் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.
English Summary
Aam Aadmi Party Councillor Resignation new party soon