#ஆந்திரா : ஆன்லைன் விளையாட்டில் ரூ.2.5 லட்சத்தை இழந்த பெண் விஷம் குடித்து தற்கொலை..!
A woman who lost Rs 2 lakhs 50 thousand in an online game committed suicide in Andhra
ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டில் ரூபாய் 2.5 லட்சம் பணத்தை இழந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரா ரெட்டி. இவரது மகள் கவிதா. இவர் ஆன்லைன் விளையாட்டில் ரூபாய் 2.5 லட்சம் பணத்தை இழந்துள்ளார். மேலும் ஆன்லைன் விளையாட்டில் முதலீடு செய்வதற்காக சில நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், ஆன்லைனில் பணத்தை இழந்தது குறித்து கவிதா தந்தையிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து கவிதாவின் தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இருப்பினும், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த மனவேதனையில் இருந்த கவிதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பூச்சிக்கொல்லி மருந்தை குளித்துள்ளார். இதைத்தொடர்ந்து குடும்பத்தினர் கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் கவிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
A woman who lost Rs 2 lakhs 50 thousand in an online game committed suicide in Andhra