டேட்டிங் செயலி மூலம் ஆண் நண்பர்களுக்கு வலைவீச்சு; அந்தரங்க படங்கள், வீடியோக்களை எடுத்து மிரட்டி ரூ.6 கோடி சுருட்டிய கில்லாடி பெண்..! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​த பல்​லவி சிங் ராஜ்புத் என்ற யுவதி டேட்​டிங் ஆப்  மூலம் பல ஆண்களை ஏமாற்றி இதுவரை 06 கோடிக்கும் மேல் சுருட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்​போனில் டேட்​டிங் செயலி மூலம் பல ஆண்​களிட​மிருந்து பணத்​தைப் பறித்து விட்​ட​தாகக் கூறி வழக்​கறிஞர் ஒரு​வர் அலகா​பாத் உயர் நீதி​மன்​றத்​தின் வழக்கு தொடுத்​துள்ள நிலையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த பல்​லவி சிங் ராஜ்புத் சமூக வலை​தளங்​கள் மற்​றும் டேட்​டிங் செயலி மூலம் நட்பு ஏற்​படுத்​திக் கொண்டு ஆண் நண்​பர்​களுடன் உரையாடி வந்துள்ளார். அவர்களுக்கு தனது அந்​தரங்​க​மான புகைப்​படங்​களை​யும், வீடியோக்​களை​யும் அனுப்​பி ஆசையை தூண்டியுள்ளார். 

அதன் பின்​னர் குறித்த ஆண்களை நேரில் வரவழைத்து அவர்களுடன் அந்​தரங்​க​மான முறை​யில் படங்​கள் மாறும் வீடியோவை எடுத்து வந்துள்ளார். பின்​னர் அந்த ஆதரங்களை வைத்து அவர்களை பிளாக்​மெ​யில் செய்து பணம் பறிப்பதாக வழக்​கறிஞர் தனது புகாரில் கூறியுள்ளார்.

இதுவரை பல ஆண் நண்​பர்​களிடம் பழகி அவர் ரூ.6 கோடிக்​கும் மேல் சுருட்​டி​யுள்​ள​தாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம், உடனடி​யாக அந்​தப் பெண் மீது வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை செய்யுமாறு போலீ​ஸாருக்கு உத்​தர​விட்டுள்ளது.

போலீஸ் நடத்​திய விசா​ரணை​யில் பல்​லவி சிங், பொய்​யான புகார்​களைக் கொடுத்து 05 பேரை சிறை​க்கு அனுப்பி இருப்பதும் தெரிய​வந்​துள்​ளது. தலைமறை​வாக உள்ள பல்​லவி சிங் ராஜ்புத், அவரது 02 பெண் உதவி​யாளர்​கள், ஒரு ஆண் உதவி​யாளர் ஆகியோரை போலீ​ஸார்​ தேடி வரு​கின்​றனர்​.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A woman in UP who met boyfriends through a dating app and made Rs 6 crores


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->